பயணிகள் கவனத்திற்கு… விழுப்புரம் – திருப்பதி ரயில் சேவையில் மாற்றம்!

விழுப்புரம் – திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் மிகவும் பிரபலமானது. இந்த கோயிலுக்கு, தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

Attention passengers... Change in Villupuram - Tirupati train service!

விழுப்புரம் – திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் மிகவும் பிரபலமானது. இந்த கோயிலுக்கு, தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். நேரம் மற்றும் செலவு குறைவாக இருப்பதால் பெரும்பானோர் ரயில்களின் மூலம் பயணங்களின் மூலம் திருப்பதிக்கு சென்று வருகின்றனர்.  

இந்த சூழலில், விழுப்புரம்-திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“விழுப்புரத்தியில் இருந்து காலை 5.35 மணிக்கு திருப்பதிக்குபுறப்படும் விரைவு ரயில் இன்று (செப்.12) முதல் செப்.20 வரை காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக திருப்பதியில் இருந்து பகல் 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் காட்பாடியில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்றடையும்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.