பெற்றோர் கவனத்திற்கு! சைக்கிள் சாகசத்தால் உயிரை இழந்த சிறுவன்!

மும்பையின் மீரா-பயந்தர் பகுதியில் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட சிறுவன் விபத்துக்கு ஆளாகி மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதின்ம வயது சிறுவர்கள் தங்களுக்கு என சைக்கிள் வேண்டுமென பெற்றோரிடம் அடம்பிடித்து வாங்கி அதனை கொண்டு…

மும்பையின் மீரா-பயந்தர் பகுதியில் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட சிறுவன் விபத்துக்கு ஆளாகி மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதின்ம வயது சிறுவர்கள் தங்களுக்கு என சைக்கிள் வேண்டுமென பெற்றோரிடம் அடம்பிடித்து வாங்கி அதனை கொண்டு சாகசத்தில் ஈடுபடுவது தொடர் கதையாகவே நிகழ்ந்து வருகிறது. இப்படி சாகசத்தில் ஈடுபடும் சிறுவர்கள் அவ்வப்போது படுகாயம் அடைவதோடு சாலையில் செல்வோரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகvum இருக்கின்றனர். இந்நிலையில் இப்படி சைக்கிள் சாகசம் செய்த சிறுவன் உயிரையே பறிகொடுத்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையின் மீரா-பயந்தர் பகுதியில் சைக்கிள் சாகசம் செய்தபோது சாலையோர சுவரின் மீது மோதி 16 வயது சிறுவன் நீரஜ் யாதவ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீரஜ் யாதவ் சைக்கிளில் அதிவேகமாக சென்ற நிலையில் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதியுள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே சுயநினைவை இழந்து சுருண்டு விழுந்தார். உடனே சாலையில் சென்ற அக்கம்பக்கத்தினர் நீரஜ் யாதவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.