அமரன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் #Rajinikanth!

நடிகர் ரஜினிகாந்த் ‘அமரன்’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு…

நடிகர் ரஜினிகாந்த் ‘அமரன்’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்துள்ளார்.

மேலும், நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். உலகளவில் கிட்டதட்ட 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘அமரன்’ திரைப்படம் வெளியாகினது. திரையிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே, இந்த படத்தின் சிறப்பு காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பார்த்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘அமரன்’ படத்தை பாராட்டினார். இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் 42.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், அமரன் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமாக கமல்ஹாசனை தொலைபேசியில் அழைத்து பாராட்டினார். மேலும், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட அமரன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.