சாக்லேட் தயாரிப்பின் மூலப்பொருளான கோகோ பீன் விலை கடந்த ஆண்டில் 150 சதவீதம் உயர்ந்துள்ளதால், சாக்லேட் விலை விரைவில் அதிகரிக்க உள்ளது.
சாக்லேட் என்பது குழந்தைகள் மட்டும் விரும்பி சாப்பிடும் இனிப்பு அல்ல. அனைத்து வயதினரும் விரும்பும் இனிப்பாகும். டார்க் சாக்லேட், வெள்ளை சாக்லேட் அல்லது பால் சாக்லேட் என இருவகை உண்டு. இதில், டார்க் சாக்லேட்டின் நன்மை காரணமாக உடல் ஆரோக்கியத்துக்கும் வெகுவாய் அது பரிந்துரை செய்யப்படுகிறது.
இதையும் படியுங்கள் : தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய் பேசி வருகிறது திமுக! – கோவையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேச்சு
இந்நிலையில், சாக்லேட் பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில், சாக்லேட் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளான கோகோவின் விலை தப்போது கடுமையாக உயர்ந்துள்ளது. உலக சந்தையில் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் கோகோ பீன் விலை ஒரு கிலோ ரூ.650 என்றளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு ஆண்டுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.200 முதல் 220 வரை இருந்த விலையைவிட, உள்ளூர் விலைகள் தற்போது 200 சதவீதம் உயர்ந்துள்ளது.
உலகளாவிய கோகோவின் விலையும் ஒரு டன்னுக்கு சுமார் 7,000 அமெரிக்க டாலர் என்றளவில் உள்ளது. இது ஒரே ஆண்டில் சுமார் 150 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. உலகளவில் கோகோ உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கும் ஐவரி கோஸ்ட் மற்றும் கானாவில், மோசமான வானிலை மற்றும் பூச்சித் தாக்குதல் காரணமாக உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது .இந்த நிலைமை தொடர்ந்தால், ஒரு டன்னுக்கு 10,000 டாலர் என்றளவுக்கு விலை எகிறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.








