முக்கியச் செய்திகள் தமிழகம்

திருநங்கைகள் மீது தாக்குதல்; 2 பேர் கைது

கோவில்பட்டி அருகே காட்டுப்பகுதியில் திருநங்கை தலை முடியை பிளேடால் வெட்டியும் தாக்கியும் வீடியோ எடுத்து வெளியிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை துலுக்கர்பட்டியைச் சேர்ந்த மகேஷ், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த அனன்யா என்ற திருநங்கை சாலையில் சென்று கொண்டிருந்த போது அவர்களை இரண்டு இளைஞர்கள் வழிமறித்து காட்டுப் பகுதியில் கை, கால் மூஞ்சிகளில் கையால் தாக்கியும் பிளேடால் அவர்கள் தலைமுடியை வெட்டியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து உடனடியாக கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்து காயம் அடைந்தவர்களை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலீடு சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் அவர்கள் மருத்துவமனையை விட்டு தலைமறைவாய் இருந்த நிலையில் இந்த வீடியோ உனது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இதனையடுத்து மகேஷ் குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜய், கழுகுமலை பகுதியைச் சேர்ந்த நோவா யுவன் ஆகிய இருவரையும் கழுகுமலை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காங்கிரசில் மேலும் ஒரு முக்கிய தலைவர் அதிருப்தி- வழிகாட்டுதல் குழுவிலிருந்து விலகல்

Web Editor

சென்னை வரும் பிரதமர்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Arivazhagan Chinnasamy

ஓ.பி.எஸ்க்கான போலீஸ் பாதுகாப்பை திரும்பபெற வேண்டும்- புகார்

G SaravanaKumar