முக்கியச் செய்திகள் தமிழகம்

தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் புகைப்படத்தை அவதூறாக சித்தரித்த லோன் ஆப் நிறுவனம்

புதுச்சேரி ஆளுநரும் தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் உட்பட பாஜக
பிரமுகர்களின் படத்தை அவதூறாக லோன் ஆப் நிறுவனம் சித்தரித்துள்ளதுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் டெல்லி கோபி. இவர் பாஜகவின்
முன்னாள் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
தலைவராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி டெல்லி கோபி
ராயல் கேஷ் ஆப் மூலமாக ஐந்தாயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அந்த கடனுடைய
தேதி நேற்றுடன் முடிவடையவே ஒரு நாள் காலதாமதம் ஆகிய காரணத்தினால் அவருடைய தொலைபேசி முழுவதும் ஹேக் செய்யப்பட்டு பாஜகவின் முக்கிய பொறுப்பில்
இருக்கக்கூடிய நபருடன் கோபியின் புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்
பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் கோபி தேடப்படும் குற்றவாளி எனவும் பதிவு செய்து டெல்லி கோபியின்
தொலைபேசியில் உள்ள அனைத்து தொடர்பு எண்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி கோபி விருகம்பாக்கம் காவல்நிலத்தில் புகார் மனு
அளித்திருக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் போலிசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.

குறிப்பாக புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
அவர்களின் புகைப்படத்தையும் அவதூறாக சித்தரித்து மிகவும் அதிர்ச்சிக்கு
உள்ளாக்கி இருக்கிறது.

ஏற்கனவே ஆன்லைன் ஆப் மூலமாக கடன் பெற்று பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முக்கிய தலைவர்கள் பாஜகவின் பிரமுகர்கள் என அனைவரின் படங்களும்
அவதூறாக சித்தரிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக சார்பில் இருந்தும்
கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிரியாமணி திருமணம் செல்லாது: முஸ்தபாவின் முதல் மனைவி பகீர்

Gayathri Venkatesan

அடுத்த சீசனில் சந்திப்போம்-விராட் கோலி

EZHILARASAN D

72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு விழாவுக்கான ஒத்திகை – சென்னை கடற்கரையில் பலத்த பாதுகாப்பு

Nandhakumar