அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவை இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஈரானில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் பெண்கள் தொடக்கப்பள்ளி மீது இஸ்ரேல் – அமெரிக்கா நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் முதல்கட்டமாக 40 மாணவிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த தகவலை அந்நாட்டு அரசு நடத்தும் செய்தி நிறுவனம் உறுதி செய்திருந்தது. தற்போது இந்த தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே பள்ளி மீதான தாக்குதலை காட்டுமிராண்டித்தனமான செயல் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் நடவடிக்கை குறித்து அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. மினாப் நகரில் ஈரானின் புரட்சிகர காவல் படையின் தளம் அமைந்துள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.







