ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்-திருவாரூர் பணிமனையில் பேருந்துகளை இயக்காமல் போராட்டம்

அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துநர் இருவரையும் தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திருவாரூர் பணிமனையில் இருந்து பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்து நேற்று முன்தினம் தடம் எண்…

அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துநர் இருவரையும் தாக்கியவர்களை உடனடியாக கைது
செய்ய வலியுறுத்தி திருவாரூர் பணிமனையில் இருந்து பேருந்துகளை இயக்காமல்
ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருந்து நேற்று முன்தினம் தடம் எண் பி 4 என்ற பேருந்து  புறப்பட்டு சென்றுள்ளது. இப்பேருந்தில் ஓட்டுநராக அம்பேத்கரும் மற்றும் நடத்துநராக ராஜாராமன் என்பவரும் பணியாற்றியுள்ளனர். இந்நிலையில் நாகை மாவட்டம் பெருங்கடம்பனூர் என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டு இருக்கும் பொழுது  படிக்கட்டில் இரு இளைஞர்கள் நின்று உள்ளனர்.பேருந்து சென்று கொண்டு இருக்கும் போது  ஓட்டுனர் அம்பேத்கரும், நடத்துநர் ராஜாராமனும், படிக்கட்டில் நின்ற இருவரையும் உள்ளே வருமாறு கூறியுள்ளனர். அதில் இளைஞர்கள்  உள்ளே வர முடியாது என வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால்  தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இளைஞர்கள் இருவரும் அவர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் நடத்துநரையும் ஓட்டுநரையும் தாக்கி உள்ளனர். இதில் ஓட்டுநர்,  நடத்துநர்  இருவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த  இருவரையும் பயணிகள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.இது தொடர்பாக போலீசார் சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் குற்றம் சாட்டி இன்று காலை பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திருவாரூர் பணிமனையில் இருந்து புறப்பட வேண்டிய 70 பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பயணிகள் , பள்ளி , கல்லூரி  மாணவர்கள்  மற்றும் வேலைக்கு செல்வோர்கள்  கடும் அவதிக்குள்ளாயினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.