சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனது இரண்டாவது முயற்சியில் 88.44 மீட்டர் எறிந்து 1வது இடத்தைப் பிடித்தார்.
வியாழக்கிழமை ஜூரிச்சில் நடந்த டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றார். இதன்மூலம், டைமண்ட் லீக் கோப்பையை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஈட்டி எறிதல் வீரர் தனது இரண்டாவது முயற்சியில் 88.44 மீட்டர் எறிந்தார். இந்தத் தொலைவுக்கு அவரது வெற்றிக்கு போதுமானதாக அமைந்தது.
நீரஜ் தனது இரண்டாவது முயற்சியில் 88.44 மீ எறிந்தார், அதைத் தொடர்ந்து தனது மூன்றாவது முயற்சியில் 88 மீ மற்றும் நான்காவது முயற்சியில் 86.11 மீ எறிந்தார். நீரஜின் ஐந்தாவது முயற்சி 87 மீ, கடைசி முயற்சி 83.6 மீ.
காயம் காரணமாக அவர் பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவில்லை.
கடைசியாக ஜூலை மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றார்.