தீவிரமடையும் தாக்குதல் – ராஃபாவிலிருந்து வெளியேறும் பாலஸ்தீனர்கள்! 

ராஃபா நகரின் மையப் பகுதிக்கு இஸ்ரேல் ராணுவம் முன்னேறியுள்ளதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.  இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர்.  இதனையடுத்து…

ராஃபா நகரின் மையப் பகுதிக்கு இஸ்ரேல் ராணுவம் முன்னேறியுள்ளதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். 

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர்.  இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு தரப்பினரும் போரை துவங்கினர்.  இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர்.  இதனிடையே, கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்த தற்காலிக போர் நிறுத்தமும் டிசம்பர் 1-ம் தேதி முடிவுக்கு வந்தது.  இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.  வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.  இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.  இரு நாடுகளுக்கு இடையேயான போருக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தும் இரு நாடுகளும் போரை கைவிடவில்லை.  இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்கா கூட,  முக்கிய வெடி குண்டுகளை இனி வழங்க மாட்டோம் என்று கூறிவிட்டது.

இருப்பினும் போர் தொடர்ந்து வருகிறது.  இதனிடையே கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று காசாவின் ராஃபா பகுதியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள தல் அல் – சுல்தான் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.  இதில் 45 பேர் உயிரிழந்துனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும் பாலஸ்தீன செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்மார்.  இந்த தாக்குதலில் பல பேர் படுகாயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என காசா சுகாதாரத் துறை தெரிவித்தது. இந்த தாக்குதலை இஸ்ரேலும் உறுதி செய்தது.  ஆயிரம் பேர் இருந்த இந்த முகாமில் 2 ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தன. தல் அல் – சுல்தான் பகுதியை நிவாரண பகுதியாக இஸ்ரேலே அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதலை நடத்தியது.

 

இதன்மூலம் இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்தது.  இதனையடுத்து,  திங்கள்கிழமை இரவும் ராஃபாவை சுற்றிவளைத்த இஸ்ரேல் பீரங்கி குண்டுகள் மற்றும் விமானங்கள் மூலம் தாக்கியது.  தொடர்ந்து, சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை மீறி ராஃபா நகரின் மையப் பகுதிக்கு இஸ்ரேல் ராணுவம் முன்னேறியுள்ளதையடுத்து,  அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.  அப்பகுதி மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த உறவினர்களின் உடல்களை வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.