முக்கியச் செய்திகள் இந்தியா வணிகம்

ஜனவரி 1 முதல் உயர்கிறது ஏடிஎம் கட்டணம்

ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம், ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து உயர்கிறது.

வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்-களில் ஒரு மாதத்துக்கு 5 முறை கட்டணமின்றி, பணம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற வங்கி ஏடிஎம்களில் என்றால் மாநகரங்களில் 3 முறை கட்டணமில்லாமல் பயன்படுத்தலாம்.

மற்றப் பகுதிகளில் 5 முறை பயன்படுத்த கட்டணமில்லை. இந்த லிமிட்டை தாண்டி தங்கள் வங்கிகளின் ஏடிஎம்-களில் பணம் எடுத்தால் தற்போது 20 ரூபாயும் மற்ற வங்கி ஏடிஎம்களின் பரிவர்த்தனைக்கு ஜி.எஸ்.டி. உடன் 23.6 ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த கட்டணம் ஜனவரி 1- ஆம் தேதி முதல் உயர்கிறது. அதற்கு மத்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வங்கிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்குமான கட்டணம் 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்ற ஏடிஎம்களை பயன்படுத்தினால், ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி-யுடன் சேர்த்து ரூ.25 ஆக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலவுகள் அதிகரித்திருப்பதால் இந்த பரிவர்த்தனைக் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே ஹெச்.டிஎஃப்.சி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள் கட்டணத்தை அதிகரித்துள்ள நிலையில் ஜனவரி 1ல் இருந்து மற்ற வங்கிகளும் உயர்த்த இருக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

திரையுலகை காப்பாற்ற வேண்டும்; மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் கோரிக்கை

Halley Karthik

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு: திமுக எம்.பிக்கு ஜாமீன்

Halley Karthik

மேகதாது தொடர்பாக மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும்: திருச்சி சிவா

Gayathri Venkatesan