அடேங்கப்பா..! மணமக்களை வியக்க வைத்த நண்பர்களின் திருமண பரிசு

கேஸ் விலை உயர்வு எதிரொலியால், பட்டதாரி மணமக்களுக்கு மண் அடுப்பு, சாணி வறட்டி,விறகு ஆகியவற்றை அன்பளிப்பாக அளித்து நண்பர்கள் அசத்தியுள்ள நிகழ்வு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக திருமணத்தில் கலந்துகொள்ளும்போது அன்பளிப்பாக என்ன கொடுக்கலாம்…

கேஸ் விலை உயர்வு எதிரொலியால், பட்டதாரி மணமக்களுக்கு மண் அடுப்பு, சாணி வறட்டி,விறகு ஆகியவற்றை அன்பளிப்பாக அளித்து நண்பர்கள் அசத்தியுள்ள நிகழ்வு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பொதுவாக திருமணத்தில் கலந்துகொள்ளும்போது அன்பளிப்பாக என்ன கொடுக்கலாம் என்பதே பலருக்கும் பெரும் பிரச்னையாக இருக்கும். ஆனாலும் திருமணத்திற்கு வரும் நண்பர்கள் தங்களால் முடிந்த அன்பளிப்பை அளித்து செல்வர். அதிலும் சிலர் வித்யாசமான அன்பளிப்புகளை கொடுத்து மணமக்களை மட்டுமல்லாது, திருமணத்திற்கு வந்திருப்பவர்களின் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் படியாக பரிசளித்துவிட்டு செல்வர். அப்படியான ஒரு நிகழ்வு கடலூரில் ,மஞ்சக்குப்பம் பகுதியில் நடந்துள்ளது.

கடலூர், மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த நயீம் என்பவருக்கும் சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த முஸ்கான் என்பவருக்கும் நேற்று திருமண வரவேற்பு அங்குள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடந்தது.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமக்களின் உறவினர்கள் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அப்போது மணமகன் நயீமின் நண்பர்கள், மணமக்களுக்கு அளித்த பரிசுகள் அனைவரின் கவனத்தையும் ஈரத்ததுள்ளது. நாளுக்கு நாள் கேஸ் சிலிண்டரின் விலை ஏற்றம் அதிகரித்து வருவதால், நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை சுட்டிகாட்டும் விதமாக அவர்கள் மணமக்களுக்கு மண் அடுப்பு, சாணி வறட்டி, விறகு ஆகியவற்றை பரிசாக அளித்தனர். நண்பர்கள் வழங்கிய பரிசினை, மேடையிலேயே வைத்து திறந்து பார்த்த மணமக்கள், அதிலிருந்த பொருட்களை கண்டு வியப்படைந்தனர்.

இந்த நிகழ்வு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரின் கவனத்தையும் ஈர்த்து சுவாரசியத்தை ஏற்படுத்தியது. வெங்காயம் விலை ஏற்றத்தின் போது வெங்காயம், பெட்ரோல் விலை ஏற்றத்தின் போது பெட்ரோல் என ஏற்கனவே மணமகனின் குடும்பத்தார் மற்றவர்களின் நிகழ்ச்சியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பரிசுகள் வழங்கி பிறரின்கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது கேஸ் விலை ஏற்றத்தை குறிப்பிட்டு மண் அடுப்பு, வரட்டி, விறகு என அவர்களது நண்பர்களே அன்பளிப்பு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.