முக்கியச் செய்திகள் தமிழகம் Local body Election

உள்ளாட்சி தேர்தல்: 22 வயதில், போட்டியிடும் பெண்

சென்னை, விருகம்பாக்கத்தில் 22 வயதில், 136-வது வார்டு மாமன்ற உறுப்பினராக ’நிலவரசி’ போட்டியிடுகிறார்.

உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இதில், கட்சி சார்பாகவும், சுயேச்சையாகவும், இளைஞர்கள், பெண்கள், திருநங்கை என பலரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், தேர்தல் களத்தில் கடும்போட்டி நிலவுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில், தலைநகர் சென்னை மாநகாரட்சியை கைப்பற்றப்போவது யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இந்நிலையில், திமுகவில் இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் அதிகளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படி திமுக வாய்ப்பு வழங்கியுள்ளதில், விருகம்பாக்கம் 136-வது வார்டு மாமன்ற உறுப்பினராக போட்டியிடும் 22 வயதே ஆன இளம் பெண் ’நிலவரசி’ தற்போது, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அண்மைச் செய்தி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் அக்டோபர் 2026-ஆம் ஆண்டு முடிவடையும்!

அவர் இதுகுறித்து தெரிவிக்கும்போது, ”எனக்கு அரசியல் ரோல் மாடல் அண்ணன், உதயநிதி ஸ்டாலின்” தான் என்றும், ”இன்றைய அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியமான தேவையாக உள்ளது எனவும், உழைத்தால் அந்த உழைப்பே அரசியலில் தூக்கிவிடும்” என நிலவரசி நெகிழ்ச்சிப்பட கூறுவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram