மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் அக்டோபர் 2026-ஆம் ஆண்டு முடிவடையும்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் அக்டோபர் 2026-ஆம் ஆண்டு முடிவடையும் என மத்திய அரசு, மக்களவையில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த எம்.பி-கள் கேட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் அக்டோபர் 2026-ஆம் ஆண்டு முடிவடையும் என மத்திய அரசு, மக்களவையில் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த எம்.பி-கள் கேட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மண்டாவியா மக்களவையில், நாடுமுழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளை மத்திய அரசு அமைத்து வருகிறது எனவும், அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2026-ஆம் ஆண்டு நிறைவடையும் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: நீட்; சமூகநீதியின்பால் பற்றுகொண்ட தலைவர்களுக்கு அழைப்பு – தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்

17.12.2018 அன்று மத்திய அமைச்சரவை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கியது. 2019 ஜனவரி 27-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடன் வழங்கும் ஒப்பந்தம் 2021 மார்ச் 26-ஆம் தேதி கையெழுத்தானது.
இந்நிலையில், ஜப்பான் கடன் உதவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதே எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கு பணி தாமதமாகுவதற்கு காரணம் என ஏற்கனவே, மத்திய அரசு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.