ஈரோட்டில் மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனை மூடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை அமைந்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பால் இந்த மருத்துவமனை கொரோனா தடுப்பூசி மையமாகவும் செயல்பட்டு வந்த நிலையில், இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சில கர்ப்பிணிகளுக்கு கொரோனா அறிகுறி இருந்தது.

இதையடுத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அதில், 10க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பாதிப்புக்குள்ளான கர்ப்பிணிகள், பெருந்துறை கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் மருத்துவமனை மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இரண்டு நாட்களுக்கு இங்கு தடுப்பூசி செலுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







