கொரோனாவை கிராமத்தைவிட்டு விரட்ட தீ பந்தம் ஏந்தி ஓடிய மக்கள்!

மத்தியப் பிரதேசத்தின் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ’ஓடு கொரோனா ஓடு’ என்று கூறிய படியே தீப்பந்தங்களை ஏந்தி சென்றுள்ளனர். மேலும் இது இக்கிராமத்தின் சடங்குகளில் ஒன்று மக்கள் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே…

மத்தியப் பிரதேசத்தின் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ’ஓடு கொரோனா ஓடு’ என்று கூறிய படியே தீப்பந்தங்களை ஏந்தி சென்றுள்ளனர். மேலும் இது இக்கிராமத்தின் சடங்குகளில் ஒன்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே ‘கோ கொரோனா கோ’ என்ற வாசகத்தைத் தொடர்ந்து இப்போது புதிய சம்பவம் ஒன்று மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் அகர் மால்வா மாவட்டம், கணேஷ்புரா கிராமத்தில் கொரோனாவைப் போக்க மக்கள் தீப் பந்தங்களை ஏந்தி சென்றுள்ளனர். இக்கிரமத்தைச் சேர்ந்த மக்கள் தீப்பந்தங்களை ஏந்தி ஊர் எல்லைகளுக்குச் செல்வர். இதைத்தொடர்ந்து அந்த தீப்பந்தங்களை ஊருக்கு வெளியில் அவர்கள் எறிந்துவிடுவர். இதனால் அந்த கிரமத்தில் ஏற்பட்டுள்ள நோய் விரைவில் குணமடையும் என்று கிராம மக்கள் நம்புகின்றனர்.

மத்தியப் பிரதேசத்தில், ஏப்ரல் 12ம் தேதி நிலவரப்படி 13,107 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் இதுவரை மத்தியப் பிரதேசத்தில் 4,46,811 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,778 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது 82,268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.