திமுகவின் தேர்தல் அறிக்கையால், இனி பெண்கள் பேருந்து உரிமையாளர்கள் ஆவார்கள் என திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் திமுக சார்பில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட மா. சுப்பிரமணியன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு சீனீவாச நகரில் திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் எம்எல்ஏக்கள் ரங்கநாதன், மா. சுப்பிரமணியன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மா.சுப்பிரமணியன், திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியான பின்பு, எனது மனைவி இனி கார் தேவையில்லை, பேருந்தில்தான் பயணம் செய்வேன் எனக்கூறியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சட்டமன்ற தேர்தல், வரலாற்று புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறினார்.







