சட்டமன்ற தேர்தல் : ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்த மு.க.ஸ்டாலின் மற்றும் விஜய்.!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு அடுத்த மாதம் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. மேலும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிடும் முதலமைச்சர் ஸ்டாலின் 2011, 2016 மற்றும் 2021 என தொடர்ந்து மூன்று முறை அத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

அதே போல பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜயும் தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

தனது முதல் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதில் ஒன்றான பெரம்பூரில் தற்போது அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.