சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 24 ஆம் தேதி முதல் விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி வரை விருப்ப மனுவை பெற்று கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர். மேலும், தமிழகத்தில் 15 ஆயிரம் ரூபாய் கட்டணத் தொகை செலுத்தி விருப்ப மனுவை பெறலாம் என குறிப்பிட்டுள்ளனர். புதுச்சேரியில் 5 ஆயிரம் ரூபாயாகவும், கேரளாவில் 2 ஆயிரம் ரூபாய் விரும்ப மனு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.