ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டி : வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!

ஆசிய விளையாட்டு ஆண்கள் ஹாக்கி போட்டியில் வங்கதேசத்தை 12-0 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23ஆம் தேதி…

ஆசிய விளையாட்டு ஆண்கள் ஹாக்கி போட்டியில் வங்கதேசத்தை 12-0 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கியது. அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சீனா, ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஈரான், கஜகஸ்தான் உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்றுள்ளன.

இந்நிலையில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வங்க தேசத்தை எதிர்கொண்டது. ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் முதல் பாதியில் 6 கோல் அடித்து முன்னிலை பெற்றனர்.

இரண்டாவது பாதியிலும் இந்திய அணியின் தாக்குதல் தொடர்ந்தது. ஹர்மன்பிரித் சிங், மன்தீர் சிங் ஹாட்ரிக் கோல் அடித்தனர். இதனால் இந்திய அணி 12-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

ஆசிய போட்டியில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், அரையிறுதிக்கு செல்கிறது. சென்னையில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.