லியோ படத்தின் டிரைலர் வரும் 5ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்தப் படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் படத்திற்கான முன்பதிவு புதிய சாதனை படைத்துள்ளது. இதனிடையே இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து லியோ படத்தின் இரண்டாவது பாடல் செப்டம்பர் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. அனிருத் பாடியுள்ள badass என்ற பாடல் வெளியான முதலே இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் லியோ படம் குறித்த அடுத்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. லியோ படத்தில் டிரைலர் வரும் 5ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. அதுகுறித்த போஸ்டர் ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.







