ஆசிய விளையாட்டு போட்டி : குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்..!

ஆசிய விளையாட்டு போட்டியின் குண்டு எறிதல் மகளிர் பிரிவில் இந்தியாவின் கிரண் பலியான் 17.36 மீட்டர் தூரம் வீசி வெண்கலப் பதக்கம் வென்றார். சீனாவின் ஹாங்ஸு நகரில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த…

ஆசிய விளையாட்டு போட்டியின் குண்டு எறிதல் மகளிர் பிரிவில் இந்தியாவின் கிரண் பலியான் 17.36 மீட்டர் தூரம் வீசி வெண்கலப் பதக்கம் வென்றார்.

சீனாவின் ஹாங்ஸு நகரில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

ஆசிய விளையாட்டுப் போட்டியில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவிற்கு தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது. 1,734 புள்ளிகளுடன் அர்ஜூன் சீமா, சரப்ஜோத் சிங், ஷிவா நர்வா ஆகியோர் அடங்கிய இந்திய அணி, சீனாவை ஒரு புள்ளியில் தோற்கடித்து தங்கம் வென்று சாதனை படைத்தது

இன்றைய போட்டியில் ஆடவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. ஐஸ்வர் பிரதாப், ஸ்வப்னில் சரேஷ், அகில் ஆகியோர் அடங்கிய அணி வெற்றி பெற்றுள்ளது.

அதுபோல, துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. ஈஷா சிங், பாலக், திவ்யா ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளி வென்றுள்ளது. இத்துடன், துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியாவுக்கு 5 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 7 தங்க  பதக்கங்களைப் பெற்றிருந்தது.

இந்த நிலையில் ஆசிய விளையாட்டில் தடகள போட்டியில் முதல் பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது. குண்டு எறிதல் மகளிர் பிரிவில் இந்தியாவின் கிரண் பலியான் 17.36 மீட்டர் தூரம் வீசி வெண்கலப் பதக்கம் வென்றார். இதில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை சீனா வென்றது. இத்துடன், இந்தியாவுக்கு 8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என 33 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் இந்தியா 5 ஆவது இடத்தில் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.