ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் பொம்மன் இலச்சினை இதற்காகத்தான்.. – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

பொம்மன் – பெல்லி தம்பதியினரை பெருமைப்படுத்தும் விதமாக ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டிக்கான இலச்சினைக்கு “பொம்மன்” என பெயர் சூட்டியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ”7-வது ‘ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை –…

பொம்மன் – பெல்லி தம்பதியினரை பெருமைப்படுத்தும் விதமாக ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டிக்கான இலச்சினைக்கு “பொம்மன்” என பெயர் சூட்டியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”7-வது ‘ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை – 2023 சென்னை’ போட்டி ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் தொடங்கி 12-ம் தேதி வரை சென்னையில் நடைபெற்று வருகிறது. ஹாக்கி இந்தியா அமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்தும் இந்தப் போட்டியில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்புகழ்பெற்ற ஹாக்கிப் போட்டி சென்னையில் மீண்டும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை எழும்பூர், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் சர்வதேச அளவிலான இப்போட்டியினை சிறப்பாக நடத்துகின்ற வகையில், 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம், ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 28-ம் தேதி திறந்து வைத்தார்.

இந்த போட்டியின் இலச்சினையாக “பொம்மன்” எனும் யானையின் சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இலச்சினை அனைவரிடமும் பெரிதளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இலச்சினை குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..

முதுமலை புலிகள் காப்பகத்தில் கைவிடப்பட்ட யானைக் குட்டிகளை தத்தெடுத்து பராமரித்து வரும் பொம்மன் – பெல்லி தம்பதியினரை பெருமைப்படுத்தும் விதமாக ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டிக்கான இலச்சினைக்கு “பொம்மன்” என பெயர் சூட்டினோம். இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியை காண, மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்திற்கு வந்திருந்த பொம்மன் – பெல்லி தம்பதியினரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தோம். அவர்களின் தன்னலமற்ற பணிகள் தொடர வாழ்த்தி மகிழ்ந்தோம்.” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/Udhaystalin/status/1689345697676668932

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.