ஞானவாபி மசூதியில் ஆய்வு: இஸ்லாமிய பிரதிநிதிகள் புறக்கணிப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி ஞானவாபி மசூதியில் தொல்லியல்துறையினர் இன்று தொடங்கிய ஆய்வை இஸ்லாமிய பிரதிநிதிகள் புறக்கணித்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி இந்து கோயில் மீது கட்டப்பட்டு இருப்பதாக…

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி ஞானவாபி மசூதியில் தொல்லியல்துறையினர் இன்று தொடங்கிய ஆய்வை இஸ்லாமிய பிரதிநிதிகள் புறக்கணித்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி இந்து கோயில் மீது கட்டப்பட்டு இருப்பதாக டெல்லியை சேர்ந்த 5 பெண்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து அந்த மசூதியில் அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்த தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மசூதி நிர்வாகம் நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்தது.
அதனை  விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றமும்,  அலகாபாத் நீதிமன்றமும் ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனிடையே மசூதியில் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞானவாபி மசூதியில் தொல்லியில் துறையினர் இன்று அறிவியல் பூர்வ ஆய்வை தொடங்கினர். 41 பேர் கொண்ட அதிகாரிகள் குழு 2 குழுக்களாக பிரிந்து ஆய்வு நடத்தினர். இதையொட்டி அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மசூதி நிர்வாக பிரதிநிதிகள் முன்பு ஆய்வு பணிகள் நடந்தன. ஆனால் இஸ்லாமிய கமிட்டி  பிரதிநிதிகள் இந்த ஆய்வை புறக்கணித்தனர். சுமார் 5 மணி நேரம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்த தொல்லியல் துறையினர் அங்கு சிவலிங்கம் இருப்பதாக கூறி இருந்தனர். லிங்கம் இருந்ததாகக் கூறப்படும் பகுதி மூடி சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த இடத்தை தவிர மற்ற இடங்களில் தொல்லியல் துறையினர் ஆய்வை மேற்கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.