அமெரிக்க கலைஞர் மற்றும் வடிவமைப்பாளர் அல்டினா ஷினாசியின் 116 ஆவது பிறந்தநாளையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமான கூகுள் முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாட்கள் பண்டிகை காலங்களில் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும். தனது டூடுல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகின்றது.
அந்த வகையில் அமெரிக்க கலைஞர் மற்றும் வடிவமைப்பாளர் அல்டினா ஷினாசியின் 116 ஆவது பிறந்தநாளையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது .
1907-ம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த இவர், வடிவமைப்புகளில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார், மேலும் ஆவணப்படங்களையும் உருவாக்கியுள்ளார். இத்தாலி, வெனிஸில் அணியக்கூடிய ஹெர்லிகுயின் மாஸ்க்குகளை கண்டறிந்தவர். ஆரம்பத்தில் இவரது வடிவமைப்புகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளார்.
1940 களில் இவர் பெண்களுக்காகவே வடிவமைத்த கேட்-ஐ கண்ணாடிகள் அமெரிக்காவில் பிரபலமடைந்தது . தற்போது வரை அந்த கண்ணாடிகள் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.







