அசோக் செல்வன் நடிக்கும் ‘போர் தொழில்’ படத்தின் புதிய அப்டேட்டை இயக்குநர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ரா.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்த ‘நித்தம் ஒரு வானம்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அசோக் செல்வன் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜாவுடன் இணைகிறார்.
‘போர்த்தொழில்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. புலனாய்வு திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ’கவுதம் வாசுதேவ் மேனன்’ வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/menongautham/status/1658785950867116034?s=20
இது தவிர, நிர்மன் இயக்கத்தில் ‘நெஞ்சமெல்லாம் காதல்’ மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பில் உருவாகும் தலைப்பிடப்படாத படத்திலும் அசோக் செல்வன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.







