நடிகர் ஷர்வானந்தின் திருமணத்தில் பாடல் பாடி அசத்திய சித்தார்த்!

நடிகர் ஷர்வானந்த் திருமண விழாவில் சித்தார்த் பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கு நடிகர் ஷர்வானந்த் மற்றும் ரக்‌ஷிதா ஷெட்டியின் திருமணம் கடந்த ஜூன் 3-ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள லீலா…

நடிகர் ஷர்வானந்த் திருமண விழாவில் சித்தார்த் பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு நடிகர் ஷர்வானந்த் மற்றும் ரக்‌ஷிதா ஷெட்டியின் திருமணம் கடந்த ஜூன் 3-ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலஸில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ராம் சரண் மற்றும் தயாரிப்பாளர் வம்சி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் திரைப்பிரபலம் சித்தார்த்தும், ஷர்வானந்தும் கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான மகா சமுத்திரம் படத்தில் இணைந்து பணியாற்றினர். இந்த படப்பிடிப்பின் போது, அவர்கள் நெருங்கிய நண்பர்களாகினர். மேலும் ஷர்வானந்தின் திருமணத்தில் சித்தார்த் முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டார்.

இந்த திருமண விழாவிற்கு நடிகர் சித்தார்த், அதிதி ராவ் ஹைதாரியுடன் கலந்து கொண்டார். ஷர்வானந்தின் திருமணம் நடைபெற்ற ஜெய்ப்பூருக்குச் செல்வதற்கு முன்பு இவர்கள் இருவரும் சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டனர்.

ஷர்வானந்த் திருமண விழாவின் போது, அங்கு நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் மேடையில் ஏறிய நடிகர் சித்தார்த், 2009-ம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படமான ஓயே திரைப்படத்தில் இருந்து ’ஓயே ஓயே’ என்ற பாடலைப் பாடினார். சித்தார்த் பாடியபோது, ​​ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவர் பாடல் பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.