அண்ணாமலை பதில் ஏற்புடையதாக இல்லை என்பதால் ஆளுநர் பாஜகவின் இன்னொரு தலைவராக உள்ளார் – கே.எஸ்.அழகிரி

பாஜக தலைமைக்கு அண்ணாமலை பதில் ஏற்புடையதாக இல்லை என்பதால் ஆளுநர் இன்னொரு தலைவராக செயல்படுவதாக கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.   தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செங்கல்பட்டு மண்டல…

பாஜக தலைமைக்கு அண்ணாமலை பதில் ஏற்புடையதாக இல்லை என்பதால் ஆளுநர் இன்னொரு தலைவராக செயல்படுவதாக கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செங்கல்பட்டு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல்காந்தி தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெறும் ஒற்றுமை பாதையாத்திரை குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் குமரி ஆனந்தன், ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு, ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதில் செங்கல்பட்டு மண்டலத்தைச் சார்ந்த உறுப்பினர்கள், மாநில அணி தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நகர ஒன்றிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் என 200-க்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது
விமான நிலையம் அமைய உள்ளது இதனை வரவேற்பதாக தெரிவித்தார்.

இந்த முறை இங்கே வரவில்லை என்றால் இனிவரும் காலங்களில் வருவதற்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்தார். தமிழ்நாடு பாஜகவில் இரண்டு தலைவர்கள் இருப்பதாகவும்,
முதலில் அண்ணாமலை இருப்பதாகவும் அவர் சொல்லுவது தலைமைக்கு ஏற்புடையதாக இல்லாததால் ஆளுநர் ஆர்.என்‌.ரவிக்கு அந்தப் பொறுப்பை வழங்கி இருப்பதாகவும் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.