“தமிழ்மொழி உள்ளவரை கவியரசரின் புகழ் நிலைத்திருக்கும்” – முதலமைச்சர் விஜய்

தமிழ்மொழி உள்ளவரை கவியரசரின் புகழும் படைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

கவிஞர் கண்ணதாசனின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழ் இலக்கிய உலகிலும், தமிழ்த் திரையிசை வரலாற்றிலும் தனி முத்திரை பதித்து நூற்றாண்டு காணும் கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கங்கள்.

மனித வாழ்வின் உணர்வுகளையும், தத்துவச் சிந்தனைகளையும், சமூக விழிப்புணர்வையும் தனது படைப்புகளின் மூலம் எளிய தமிழில் தந்து அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்தவர் கவியரசு கண்ணதாசன்.

காலங்களைக் கடந்தும் தலைமுறைகளை வழிநடத்தும் இலக்கியப் பொக்கிஷங்களாக அவரது படைப்புகள் திகழ்கின்றன.

தமிழ்மொழி உள்ளவரை கவியரசரின் புகழும் படைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.