நடிகர் ரஜினிகாந்தின் 173 திரைப்படத்தின் டைட்டில் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் படத்தின் டைட்டில் ‘தர்மன்’ என்று அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ‘தர்மன்’ பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
நான் பேசினாலே பிராப்ளம் தான். நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது. நம்மை பிடித்தவர்களுக்கு நாம் பேசுவது அனைத்தும் பிடிக்கும்.
கமல்ஹாசன் தயாரிப்பில் நான் நடிக்கும் படத்துக்கு முதலில் கே. எஸ்.ரவிக்குமாரிடம் பேசினோம். அடுத்து சுந்தர்.சி வந்தார். அவரால் பண்ண முடியவில்லை. அடுத்து சிபிசக்ரவர்த்தி வந்தார். அந்த கதை நியூக்ளியர் சம்பந்தப்பட்ட சென்சிட்டிவ் சப்ஜெக்ட். அதனால், அது நடக்க வில்லை. இப்போது அஷ்வத் மாரிமுத்து வந்து இருக்கிறார். எனக்கு அவர் இயக்கிய டிராகன் பிடிக்கும்.
கமல்ஹாசன் எனக்கு செய்த உதவி, ஒத்துழைப்பு, நிறைய. 1975களில் அவர் பெரிய ஸ்டார். இளமை ஊஞ்சாடுகிறது படத்தில் முதலில் ஜெய்கணேஷ் பண்ண வேண்டியது. இந்த தலைப்புக்கு ரஜினி நல்லா இருக்கும் என பேசி, என்னை அந்த படத்தில் நடிக்க வைத்தார். அவர் தொடர்ந்து படம் தயாரிக்க வேண்டும். தர்மன் நல்ல கமர்சியல் படம். முதலமைச்சர் விஜய்க்கு நான் பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டேன். இவ்வாறு பேசினார்.
டிராகன் பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் நடிகை சிம்ரன் நடிக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு நாளை தொடங்குகிறது.




