நடிகர் ரஜினிகாந்தின் 173 திரைப்படத்தின் டைட்டில் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் படத்தின் டைட்டில் ‘தர்மன்’ என்று அறிவிக்கப்பட்டது. டிராகன் பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
தொடர்ந்து ‘தர்மன்’ பட விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது :
ரஜினிகாந்த் ஆரம்பத்தில் சின்ன ரோலில் நடித்தார். பின்னர் நானும் அவரும் ஒரே இடத்துக்கு வந்தோம். 40 ஆண்டுகளுக்கு முன், என் தயாரிப்பில் ரஜினி நடிப்பது பற்றி பேசினோம். ராஜ்கமல் புது ஆபிஸ் தொடக்க விழாவிலும் பேசினோம்.
ஏ.வி.எம் வேப்ப மரத்தடியில் பேசிய இளைஞர்கள் இன்று இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறோம். இந்த படத்தில் தயாரிப்பாளர் ஆக நான் அமைதியாக இருந்தேன். ஹீரோ ரஜினி தான் அதிக வேலை செய்தார். நான் நடப்பதை வேடிக்கை பார்த்தேன்.
இந்த படத்தில் அஷ்வத் மாரிமுத்துக்கு அதிக பொறுப்பு. அது அவருக்கும் தெரியும். நான் அவரை பயமுறுத்தவில்லை.
இந்த பட ஹீரோயின் சிம்ரன் என்னோடும் நடித்து இருக்கிறார். ரஜினியுடனும் நடித்து இருக்கிறார். அனிருத்தின் இசை உலக அளவில் மாறிக்கொண்டு இருக்கிறது. கால்பந்துக்கு கூட இசையமைத்து வருக்கிறார். இப்போது நல்ல படங்கள் வர வேண்டும். அதற்கு எங்களுக்கும் பொறுப்பு உள்ளது. இவ்வாறு பேசினார்.




