திருப்புவனம் காவலாளி கொலை வழக்கில் சாட்சிகளுக்கு சி.பி.ஐ சம்மன்!

திருபுவனம் காவலாளி அஜித்குமார் தனிப்படை காவலர்களால் விசாரணையின்போது உயிரிழந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கோரி சாட்சிகள் ஐந்து பேருக்கு சி.பி.ஐ சம்மன் வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம்  கோவிலில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். நகை திருட்டு புகார் தொடர்பாக  தனிப்படை காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார்  காவலர்கள் கடுமையாக தாக்கியதால் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் திருப்புவனம் காவல்துறையினர்  தனிப்படையைச் சேர்ந்த 5 காவலர்களை  கைது செய்தனர். மேலும், தமிழக அரசால் அஜித்குமார் கொலை வழக்கானது  சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஜுலை 14 காம் தேதி விசாரணையை துவக்கினர்.

இந்த நிலையில் மடப்புரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், சகோதரர் நவீன் குமார்,பிரவீன்,வினோத், வீடியோ எடுத்த அறநிலை துறை ஊழியர் சத்தீஸ்வரன் ஆகிய ஐந்து பேரும் மதுரை ஆத்தி குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணி அளவில் ஆஜராக கோரி  சிபிஐ அதிகாரிகள் நேரில் வந்து சம்மன் வழங்கினர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.