முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

ஆர்யன் கானுக்கு கிடைக்குமா ஜாமீன்? இன்றும் தொடர்கிறது விசாரணை

போதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்றும் தொடர்கிறது.

மும்பையில் இருந்து கடந்த 3 ஆம் தேதி கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை செய்தனர். அங்கு போதைப் பொருள் பார்ட்டியில் கலந்துகொண்டதாக, பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட சிலரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆர்யன் கான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். நிராகரிக்கப்பட்டதை அடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அங்கும் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீது பதிலளிக்கக் கோரி, போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனர். அதில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த வழக்கில், ஆர்யன் கான் தரப்பில் மூத்த வழக்கறிஞரும் இந்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான முகுல் ரோத்தகி ஆஜரானார். அவர் வாதிடும்போது, ஆர்யன் கானிடம் இருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரமும் இல்லை என்றும் அவரை 20 நாட்களுக்கும் மேலாக சிறையில் வைத்திருப்பது தவறானது என்றும் வாதிட்டார்.

இந்த ஜாமீன் மனு மீதான வாதம் நேற்று முடிவடைந்ததை அடுத்து, விசாரணை இன்று தள்ளி வைக்கப்பட்டது. இன்று பிற்பகல் இந்த விசாரணை நடக்கிறது. ஆர்யன் கானுடன் கைதான அவர் நண்பர் அர்பாஸ் மெர்சண்ட், பிரபல மாடல் முன்முன் தமேச்சா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான வாதம் இன்று நடைபெறுகிறது.

Advertisement:
SHARE

Related posts

நூற்றாண்டை தொடும் சபாநாயகர் இருக்கையின் வரலாறு…

Ezhilarasan

லடாக்: நதியில் கவிழ்ந்து வாகன விபத்து-7 வீரர்கள் பலி

Ezhilarasan

தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு சம்பவம்: சொன்னதை செய்து காட்டிய திமுக அரசு!

Hamsa