இன்று விசாரணைக்கு வருகிறது ஆர்யன் கானின் ஜாமின் மனு

போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.    மும்பையில் இருந்து கோவாவுக்கு கடந்த 2 ஆம் தேதி சொகுசு கப்பல்…

போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது. 

 

மும்பையில் இருந்து கோவாவுக்கு கடந்த 2 ஆம் தேதி சொகுசு கப்பல் ஒன்று சென்றது. அதில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை விருந்து நடப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த விருந்தில் கலந்துகொண்ட, நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து கைது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

வெளிநாட்டை சேர்ந்த ஒருவரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஆர்யன் கான் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 2வது முறையாக மீண்டும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.