முக்கியச் செய்திகள் விளையாட்டு

இன்றைய பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா

இன்று நடைபெற உள்ள பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

7வது டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தரவரிசையில் டாப் 8 இடங்களை பிடித்துள்ள இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் களமிறங்குகின்றன. அதற்கு தங்களை தயார் படுத்தி கொள்ள தற்போது பயிற்சி ஆட்டங்களில் அந்த அணிகள் விளையாடி வருகின்றன.

முன்னதாக நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொண்டு 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியில் இசான் கிஷான், கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில், இன்று 2வது மற்றும் கடைசி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. வரும் ஞாயிறன்று இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதனால், அணியின் பேட்டிங் தரவரிசை குறித்து சோதிக்க இன்றைய ஆட்டத்தை இந்தியா பயன்படுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்!

எல்.ரேணுகாதேவி

ஆங்கிலப் படத்தில் சமந்தா: இருபாலின ஈர்ப்பாளராக நடிக்கிறார்!

Halley Karthik

மு.க. ஸ்டாலின் பதவியேற்பு விழா: 200-க்கும் குறைவான பிரமுகர்களை அழைக்கத் திட்டம்!

Halley Karthik