இயக்குநராக அறிமுகமாகும் அருவி மதன் – ”நூடுல்ஸ்” திரைப்படத்தின் விமர்சனம்..!

அருண் பிரகாஷ் தயாரிப்பில், வி ஹவுஸ் புரொடக்சன் சுரேஷ் காமாட்சி ரிலீஸில் செப்.8-ம் தேதி வெளியாக இருக்கும் படம் தான் நூடுல்ஸ். நூடுல்ஸ் படம் ஆடியன்ஸை ருசிக்க வைத்ததா… இல்லையா… என்று பார்க்கலாம். படத்தின்…

அருண் பிரகாஷ் தயாரிப்பில், வி ஹவுஸ் புரொடக்சன் சுரேஷ் காமாட்சி ரிலீஸில் செப்.8-ம் தேதி வெளியாக இருக்கும் படம் தான் நூடுல்ஸ். நூடுல்ஸ் படம் ஆடியன்ஸை ருசிக்க வைத்ததா… இல்லையா… என்று பார்க்கலாம்.

படத்தின் கதை

ஒரு சனிக்கிழமை இரவில் ஹரிஸ் உத்தமன், ஷூலா மற்றும் வீட்டுக்கு அருகே கூடியிருக்கும் குடும்பங்கள் என அனைவரும் சேர்ந்து அவர்கள் வீட்டு மொட்ட மாடியில் விளையாடி கொண்டிருக்கிறார்கள். நடுராத்திரியில் சத்தம் அதிகமாக கேட்டதால் அந்த பகுதி போலீஸாக நடித்திருக்கும் மதன் அங்குள்ளவர்களை மிரட்டும் தோனியில் பேசுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த ஹரிஷ் உத்தமன், ஷுலா மற்றும் அக்கம் பக்கத்தினர் இன்ஸ்பெக்டர் மதனை எதிர்த்து பேசுகின்றனர். கடைசியில் பழி வாங்கும் நோக்கத்தில் இன்ஸ்பெக்டர் மதன் அவர்களை வேறு ஒரு பிரச்னையில் மாட்டி விடுகிறாரா என்பது தான் படத்தின் மீதி கதை. பொதுவா வாழ்க்கைல இந்த விஷயம்லா ஏன் நடக்குதுன்னு தெரியாது. எல்லாம் தானா நடந்து அதுவே சரி ஆகிடும். இல்லாட்டினா நமக்கே சிரிப்பு வர மாதிரி சில விஷயங்கள் முடிஞ்சிறும். அது மாதிரி தான் இந்த படமும். படம் ஆரம்பத்தில் நமக்கும் இப்படி ஒரு அக்கம் பக்கத்தினர் இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைக்க தோணும். கடைசியில் எப்படி சிக்கிருக்கேன் பாத்தியாப்பா என்று ஹரிஷ் பேசும் மைண்ட் வாய்ஸ் நமக்கே கேட்கும் அளவுக்கு இருக்கும்.படத்தின் முதல் பாதி வரை வம்பை விலைக்கு வாங்கும் தோனியில் இருப்பதாக தெரிகிறது. ஒரு பக்கம் காரணம் இல்லாமல் இந்த விஷயம்லா எதுக்கு நடக்குதுன்னு இருக்கு. ஆனால் 2ம் பாதி முதல் பாதி படத்தை தூக்கி சாப்பிட்டு விட்டது. அந்த அளவுக்கு காமெடி, திருப்பம்ன்னு கலக்கிறுச்சு படம். நல்ல ஜேர்னர்ல படத்த நன்றாக கொண்டு போயிருக்காங்க. அயலி, மாவீரன் உள்ளிட்ட படங்களில் நடிப்பில் கலக்கிய மதன் ”நூடுல்ஸ்” படம் மூலமாக எனக்கு இயக்கவும் தெரியும் என்று நிருபித்துள்ளார். சின்ன பட்ஜெட் படம் தான், ஆனால் நன்கு ரசிக்க வைத்துள்ளது. இளம் குழுவுக்கு வாழ்த்துக்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.