ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் : நாளை முதல் டிக்கெட் விற்பனை!

ஐசிசி உலகக் கோப்பை போட்டிக்காக  4 லட்சம் டிக்கெட்டுகள் தயாராக உள்ள நிலையில், நாளை முதல் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோலாகலமாக நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி…

ஐசிசி உலகக் கோப்பை போட்டிக்காக  4 லட்சம் டிக்கெட்டுகள் தயாராக உள்ள நிலையில், நாளை முதல் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோலாகலமாக நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி கடந்த 2019-இல் இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து முதன்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இதன் தொடா்ச்சியாக உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது. கடந்த 2 ஆண்டுகளாக பிசிசிஐ போட்டிக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தது.

இந்தியாவில் வரும் அக்டோபா் 5-ஆம் தேதி போட்டி தொடங்கி நவம்பா் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலஙகை உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்கின்றன.

கடந்த முறை இறுதி ஆட்டத்தில் மோதிய இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகள் அக். 5-ஆம் தேதி தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றன. இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக சுமார் 4 லட்சம் டிக்கெட்டுகள் தயாராக உள்ளன.ரசிகா்கள், அதிகாரபூாவ இணையத்தில் டிக்கெட்டுகளை வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.