அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரிகள் அழகான தமிழில் மகாகவி பாரதியாரின் பாடலை பாடி அசத்தியிருக்கின்றனர்.
இந்த வீடியோ லிங்க்கை அந்த மாநில முதலமைச்சர் பெமா காண்டு டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீநிவாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரின் பெயர்களை பெமா காண்டு டேக் செய்துள்ளார்.
அந்த வீடியோவில் இசைக் கருவிகளை இருவர் இசைக்க, மகாகவி பாரதியார் எழுதிய தமிழ் நாட்டுப்பற்று பாடலான “பாருக்குள்ளே நல்ல நாடு” என்ற பாடலை அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் சகோதரிகள் இருவர் பாடி அசத்தியிருக்கின்றனர்.
இந்த வீடியோ தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தமிழில் டுவீட் செய்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
அந்தப் பதிவில், ” இதைக் கண்டபோது நான் பெருமகிழ்ச்சியும் உவகையும் கொண்டேன். ஒரே இந்தியா உன்னத இந்தியா கோட்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழில் பாடியுள்ள அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சக்தியின் நட்சத்திரங்களுக்கு எனது பாராட்டுக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.








