அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர்

அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 28ம் தேதி தொடங்கவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நேற்று…

அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 28ம் தேதி தொடங்கவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்த எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான அழைப்பிதழை வழங்கினர். அதன்படி, வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார்.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக் கழகத்தில் வரும் 28ம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவர்களுக்கு  பட்டங்களை வழங்கும் பிரதமர், உரையும் நிகழ்த்துகிறார். நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா தொடர்பாக ஏற்கனவே ஆளுநர் தரப்புக்கும், தமிழ்நாடு அரசு தரப்புக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. அண்மையில் நடந்த மதுரை காமராசர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் விதிகள் மீறப்பட்டதாகக் கூறி அமைச்சர் பொன்முடி அதனை புறக்கணித்தார். இந்த நிலையில் பட்டமளிப்பு விழாவில் பிரதமர், ஆளுநர், முதலமைச்சர் ஒரே மேடையில் கலந்துகொள்ளவுள்ளது கவனிக்க தகுந்ததாக மாறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.