முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம்: வரும் 26-ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 26-ம் தேதி திறந்து வைக்கிறார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி,  கடந்த 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல் நலக்குறைவால்…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 26-ம் தேதி திறந்து வைக்கிறார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி,  கடந்த 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.  இந்நிலையில்,  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி,  மெரினாவில் ரூ.50 கோடி மதிப்பில் கருணாநிதி நினைவிடம் மற்றும்  100 அடி உயரத்திற்கு பேனா சிலை அமைக்கப்பட்டு வந்தது.   இந்த நிலையில், கருணாநிதி நினைவிடம் கட்டும் பணி முடிவடைந்து உள்ளது.  அதற்கு முன் உள்ள அண்ணா நினைவிடத்தை புனரமைக்கும் பணி,  தடுப்புச்சுவர் கட்டும் பணி, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்தது.   இந்த நிலையில், இந்த நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 26-ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.