முக்கியச் செய்திகள் இந்தியா

காஷ்மீரில் பாதுகாப்புப்படை அதிரடி; தீவிரவாத கமாண்டர் உயிரிழப்பு

ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஜம்மு & காஷ்மீரில் இந்திய விமானப்படை தளம் மீது சமீபத்தில் தீவிரவாதிகள் நடத்திய ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் நிலவிவந்தது. இப்பதட்ட சூழலை தவிர்க்க ஜம்மு & காஷ்மீர் காவல்துறை, இந்திய ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப்படையினர் தீவிரவாதிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவா அமைப்பின் கமாண்டர் மெஹ்ராஜ் உத் தின் உயிரிழந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவர் பல தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர் என்று சொல்லப்படுகிறது. மேலும், இத்தாக்குதல் சம்பவத்தில் மெஹ்ராஜ் உயிரிழந்ததுள்ளது பாதுகாப்புப்படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என ஜம்மு & காஷ்மீர் ஐஜிபி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் திட்டத்தில், ஜம்மு & காஷ்மீர் காவல்துறை, இந்திய ராணுவம், ராஷ்டிரிய ரைபிள்ஸ், சிஆர்பிஎப் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் களமிறங்கி வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளனர்.

முன்னதாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங், ஏடிஜி ஜம்மு முகேஷ் சிங், ஐபி தலைவர் அரவிந்த்குமார், டிஜி சிஆர்பிஎஃப் குல்தீப் சிங் மற்றும் டிஜி சிஐஎஸ்எஃப் சுதீர் குமார் ஆகியோருடன் கலந்தாலோசித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முதல்வருக்கு ஆதரவு தெரிவித்த விவசாயிகள்!

Gayathri Venkatesan

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: வாசன்

EZHILARASAN D

75வது சுதந்திர தினவிழா; ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

G SaravanaKumar