ஹரியானா தேர்தலில் போட்டியா? #RahulGandhi உடன் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா திடீர் சந்திப்பு!

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளனர். பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ்…

Are you sure about running in politics? Pokhat met Rahul Gandhi, Punia!

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளனர்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

தொடர்ந்து தாய்நாடு திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹரியானா காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தீபேந்தர் ஹூடா அவரை விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றார்.

இதனைத்தொடர்ந்து வினேஷ் போகத் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் தெரிவித்தார். மேலும் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் பபிதா குமாரி போட்டியிட வாய்ப்புள்ள நிலையில், அவருக்கு எதிராக வினேஷ் போகத் களமிறங்குவார் என்றும் அவர் தெரிவித்தார். பாலியல் வன்கொடுமை தொடர்பாக பாஜகவின் பிரிஜ் பூஷணுக்கு எதிராக அவர் போராட்டம் நடத்திய நிலையில், காங்கிரஸ் சார்பில் அவர் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் மல்யுத்த வீரர், பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை இன்று சந்தித்தனர். முன்னரே காங்கிரஸ் சார்பில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த சந்திப்பு பெரும் பேசுபொருளாகியுள்ளது.

ஹரியானாவில் வரும் அக்.5ஆம் தேதி 90 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.