நீங்கள் பாதுகாப்பா இருக்கிறீர்களா? பெங்களூரு டிராஃபிக்கில் சிக்கியவருக்கு ரேபிடோ கொடுத்த அலெர்ட் இணையத்தில் வைரல்!

பெங்களுர் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டிருந்த நபருக்கு ராபிடோ நிறுவனத்திடமிருந்து எச்சரிக்கை மெசேஜ்கள் அனுப்பப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் உலகம் தன்னை புதுப்பித்து வரும் நிலையில், புதிய தொழில்களும் நாட்டில் பெருகிவிட்டன. முன்பு வாடகை கார்களில் செல்வதற்கு வாடகை கார் நிறுவனங்களை அணுகும் நிலை மாறி தற்போது எல்லாமே ஆன்லைன் என வந்தாகிவிட்டது.

ஒரு நபர் பயணிப்பதற்கு ஆட்டோ மற்றும் கார் எதற்கு என்கிற சிந்தனை மொபைல் பைக் என்கிற புதிய தொழில்நுட்பத்திற்கு வழிவகுத்து ரேபிடோ , ஊபர் போன்ற பைக் கால் டாக்ஸி அறிமுகமாகின. தற்போது பல்வேறு செயலிகளின் உதவியால், வாடகை கார்கள், பைக்குகளின் சேவை எளிமையாக மாற்றப்பட்டுள்ளது.

Rapido's rapid rise: How the start-up is looking to challenge duopoly of Ola  and Uber - BusinessToday

ஒலா, ஊபர், ராபிடோ உள்ளிட்ட வாடகை வாகன செயலிகளில் பணிபுரிவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கல்லூரி மாணவர்களும், பல்வேறு கூலி வேலை செய்வோரும் பகுதி நேர வேலையாக டெலிவரி சேவை மற்றும் ரேபிடோ உள்ளிட்ட பைக் கால் டாக்ஸியில் பணியாற்றி வருகிறார்கள்.இந்த நிலையில், பெங்களுரில் நடந்த சம்பவம்  இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக ரேபிடோவில் பைக் புக் செய்யும் நபருக்கு அந்நிறுவனம் பாதுகாப்பு காரணங்கள் கருதி சில எச்சரிக்கை மெசேஜ்களை அனுப்பும். அந்த வகையில் உங்கள் கேப்டன் ஹெல்மெட் அணிந்திருக்கிறாரா? சரியான பாதையில்தான் பயணிக்கிறாரா? வீட்டிற்கு பத்திரமாக சென்று விட்டீர்களா? உள்ளிட்ட மெசேஜ்கள் மற்றும் கால் சேசையின் மூலம் தொடர்பு கொண்டு எச்சரிக்கும்.

Rapido aims to attract auto drivers with zero commission

 

அந்த வகையில் பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர் ரேபிடோ ஆட்டோவை புக் செய்துள்ளார் . அவர் புக் செய்த ரேபிடோ ஆட்டோ அவரை அழைத்து கொண்டு செல்கையில் பெங்களூரின் கடுமையான போக்குவரத்து  நெரிசலில் சிக்கிவிட்டது. இதன்காரணமாக ஒரு மேம்பாலத்தில் ஆட்டோ நகராமல் நீண்ட நேரமாக நின்றுள்ளது. இந்த நிலையில் வாடிக்கையாளர்க்கு ரேபிடோ நிறுவனத்திடம் இருந்து பாதுகாப்பு குறித்த செய்திகள் வந்துள்ளதை கண்ட  வாடிக்கையாளர் ஆச்சரியமடைந்துள்ளார்.

ரேபிடோ போன்ற சேவைகள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை சரிபார்பதற்காக, அவர்கள் வாடகைக்கு எடுத்த வாகனங்கள் நீண்ட நேரம் நின்றுகொண்டிருக்கும்போது அவர்களை எச்சரிக்கும். இருப்பினும், இந்த குறிப்பிட்ட சம்பவத்தில், கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக, அந்த நபரின் ஆட்டோ நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்றதால் வாடிக்கையாளருக்கு எச்சரிக்கை மெசேஜ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக அந்த நபர் சமூக ஊடகத்தில் ,நடந்த சம்பவம் குறித்து நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார். அவரின் பதிவில் “நான் பாதுகாப்பாக இருக்கிறேனா என்று ரேபிடோவிலிருந்து கேட்டார்கள் , ஏனென்றால் என் ஆட்டோ சிறிது நேரம் நகரவில்லை, நான் ஆபத்தில் இல்லை நான் மாரத்தஹள்ளி பாலத்தில் இருக்கிறேன்,” என்று அந்த குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://x.com/unnimanga/status/1884219423369879850

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.