வேலை செய்பவர்களின் பணிச்சுமை, மனஅழுத்தத்தை போக்கும் முயற்சியாக இங்கிலாந்தில் 4 நாட்கள் வேலை திட்டம் சோதனை நடத்தப்பட்டது.
அதிவேகமான வாழ்க்கை ஓட்டத்தில் வாரத்தில் 5 நாட்கள் வேலை 2 நாட்கள் விடுமுறை அல்லது சில அலுவலகங்களில் 6 நாட்கள் வேலை 1 விடுமுறை என்பது தற்போது உலக நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் 5 நாட்கள் வேலை செய்வதை குறைத்து 4 நாட்கள் ஆக்கினால் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு சோதனை நடத்தப்பட்டது.
இதையும் படிக்கவும்: கடை உரிமையாளரை தாக்கிய காவலர் பணியிடை நீக்கம்: நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக நடவடிக்கை
இந்த சோதனை, இங்கிலாந்தில் கடந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை 6 மாத காலங்கள் நடைபெற்றது. இதில் 61 நிறுவனங்கள் பங்கேற்றன. கிட்டதட்ட 3,000 தொழிலாளர்கள் 5 நாட்கள் பார்க்கும் வேலையை, 4 நாட்கள் செய்தனர். இதற்கு அதே ஊதியம் வழங்கப்பட்டது. இந்த சோதனையில் ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிஜ்ட் பல்கலைகழகங்களும் இதில் ஈடுபட்டன.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர் ஜூலியட் ஷோர் கூறுகையில், வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்வது என்பது ஒரு சோதனை முயற்சியாக நடத்தப்பட்டது. இது சிலரின் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது தெளிவாக தெரிந்தது. அதிலும், கட்டுமான தொழில் செய்வோர்களுக்கு போதிய ஓய்வு நேரம் கிடைத்தது என்று கூறினார்.
இந்த சோதனைக்கு பல்வேறு நிறுவனங்கள் 10க்கு 8.5 என மதிப்பிட்டுள்ளன. மேலும் இந்த காலகட்டத்தில் முந்தைய ஆண்டைவிட வருவாய் 35 சதவீதம் அதிகரித்திருந்தது தெரியவந்துள்ளது.
இந்த சோதனை காலகட்டத்தில் நிறுவன ஊழியர்களின் வாழ்க்கை மற்றும் வேலை ஆகியவை திருப்தியுடன் இருந்ததும், அவர்களின் ஆரோக்கியம் மேம்பட்டது குறிப்பிடத்தக்கது. மன அழுத்தம், சோர்வு, தூக்கமின்மை போன்ற ஊழியர்களின் பிரச்சினைகள் குறைந்துள்ள நிலையில், இந்த 4 நாள் வேலை திட்டம் 91 சதவீதம் அமலுக்கு வருவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.







