லாட்டரியில் 25 கோடி பரிசு கிடைத்தாலும், உரிய விசாரணை நடத்திய பின்னரே ஒப்படைக்கப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடைபெறற பம்பர் லாட்டரி குலுக்கலில் திருப்பூரை சேரந்த 4 பேருக்கு முதல் பரிசு 25 கோடி ரூபாய், விசாரணைக்கு பின்னரே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட பரிசு சீட்டை தான் வாங்கியுள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து லாட்டரி துறை இணை இயக்குனர், நிதி அதிகாரிகள் உட்பட ஏழு பேர் கொண்ட சிறப்புக் குழு விசாரணை நடத்திய பிறகே பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







