டெல்லியில் முழு ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா மக்களை சூறையாடி வந்தது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் பலர் தீக்கு இறையாகினர். இந்த நிலையில் அம்மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கெஜ்ரிவால், முழு ஊரடங்கு பயனளிப்பதால் தொற்று குறைந்து வருவதாக அவர் தெரிவித்தார். அனைத்து மக்களின் ஒத்துழைப்புடன் ஊரடங்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 12,481 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிகை 13,583 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களில் ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஆக்சிஜன் மற்று ஐசியூ படுக்கைகளுக்கு தற்போது பஞ்சம் இல்லை எனக் கூறியுள்ளார். அடுத்த 3 மாதத்தில் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் அடுத்த சில தினங்களுக்கு மட்டுமே தடுப்பூசி உள்ளதாக அவர் தெரிவித்தார்.







