சென்னையில் நடைபெற இருந்த ஏ.ஆர்.ரகுமானின் இசை கச்சேரி, மழை காரணமாக ரத்து! ரசிகர்களை சமாதானப்படுத்திய இசைப்புயல்!

சென்னையில் நடைபெற இருந்த ஏ.ஆர்.ரகுமானின் இசை கச்சேரி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. “மறக்குமா நெஞ்சம்” என்ற பெயரில், சென்னை பனையூரில் ஏ.ஆர்.ரகுமானின் இசை கச்சேரி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை ரசிகர்கள் ஆவலுடன்…

சென்னையில் நடைபெற இருந்த ஏ.ஆர்.ரகுமானின் இசை கச்சேரி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

“மறக்குமா நெஞ்சம்” என்ற பெயரில், சென்னை பனையூரில் ஏ.ஆர்.ரகுமானின் இசை கச்சேரி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், மழை காரணமாக இந்த கச்சேரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இசை கச்சேரி நடைபெறும் இடத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால், ரசிகர்களின் பாதுகாப்பு கருதி இசை கச்சேரி வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இசை கச்சேரி ரத்தானதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதிலும் நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாது  சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் சென்னை வந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகினர். இது தொடர்பாக பலர் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் பதில் அளித்து அசுவாசப்படுத்தியுள்ளார்.

https://twitter.com/arrahman/status/1690334971087716352

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.