முக்கியச் செய்திகள் தமிழகம்

புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்- ஜெயக்குமார் கோரிக்கை

மாண்டஸ் புயல் தாக்கத்தினால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில்
சேதமடைந்துள்ள மீனவர்களின் படகுகளுக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

மாண்டஸ் புயல் காரணமாக காசிமேடு துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தபட்டிருந்த ஏராளமான விசைப்படகுகள் காற்றின் வேகத்தினால் ஒன்றோடொன்று மோதி கொண்டதால் விசைப்படகுகள் சேதமடைந்து நீரில் மூழ்கி உள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்த முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு சேதமடைந்த விசைப்படகுகளை ஒவ்வொரு படகில் இறங்கி படகுகளை பார்வையிட்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மாண்டஸ் புயலால் சென்னை முழுவதிலும் உள்ள மீனவர்கள் கடுமையாக பாதித்து இருப்பதாக கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குறிப்பாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர், விசை படகுகள், கட்டுமரம் மற்றும் மீன்பிடி சாதனங்கள், மீன்பிடி வலைகள் என அனைத்தும் சேதம் அடைந்துள்ளது. இதில், முழுமையாக சேதமடைந்த படகிற்கு 20 லட்சம் ரூபாயும், பகுதிய அளவில் சேதமடைந்த படகிற்கு பத்து லட்ச ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நாளில் இருந்து மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாத நிலையில், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை கணக்கிட்டு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் விதம் 20 நாட்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மாண்டஸ் புயலால் கடுமையாக பாதித்துள்ள மீனவர்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும்.

வங்க கடலில் புயல் உருவானதாக 5ம் தேதியே வானிலை ஆய்வு மையம் அறிவித்த
நிலையில், 7 ம் தேதி தென்காசிக்கு ரயில் மூலம் உல்லாசமாக பயணம் மேற்கொண்டது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். புயல் உருவானதாக அறிவித்த உடனேயே அதிகாரிகளையும், அமைச்சர்களையும் அழைத்து போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை ஆலோசித்து, அவர் உத்தரவிடாததே இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டதற்கு காரணம் என்றும் அவர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

டிசம்பர் 14ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்ய இருப்பதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இது தற்போதைய தமிழக மக்களுக்கு அவசியமா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் உதயநிதி அமைச்சராவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், நரி நகர்வலம் சென்றால் என்ன, ஊர்வலம் சென்றால் என்ன மக்களை கடிக்காமல் இருப்பது தான் முக்கியம் என்றார்.

மாண்டஸ் புயலால் கடுமையாக பாதித்துள்ள மீனவர்களுக்கு எதுபோன்ற நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யாமல், பெயரளவுக்கு 5 கிலோ அரிசியையும், ரொட்டி பாக்கெட்டுகளையும் கொடுப்பதினால் அவர்களுக்கு எந்த தீர்வையும் ஏற்படுத்தாது என்றும் ஜெயக்குமார் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி

Dinesh A

காவல் நிலையத்தில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை

EZHILARASAN D

மக்களவைத் தேர்தலைப் போல திமுக கூட்டணி வெற்றி பெறும் : மு.க.ஸ்டாலின்

Halley Karthik