இசைஞானி இளையராஜாவிற்கு பாராட்டு விழா – தமிழக அரசு அறிவிப்பு!

இசைஞானி இளையராஜாவின் இசைப் பயணத்தை சிறப்பிக்கும் விதமாக, வரும் 13ம் சென்னையில் அவருக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய திரையுலகில் பழம்பெரும் இசையமைப்பாளர் இளையராஜா ஆவார். 1976 ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மேலும் கடந்த  மார்ச் மாதம் 8-ந்தேதி லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை இளையராஜா நடத்தினார். அவருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் வரும் 13ம் தேதி  இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக லண்டனில் இருந்து திரும்பியபோதே  தமிழக அரசு தரப்பில் இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று  அறிவிக்கப்பட்டது.  ஆனால் ஒரு சில காரணங்களால் இந்நிகழ்ச்சி தள்ளிக்கொண்டே சென்றது. இந்த நிலையில், இளையராஜாவின் இசைப் பயணத்தை சிறப்பிக்கும் விதமாக, வரும் 13ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்கின்றனர் என்றும் பல்வேறு திரைத்துறையினர், இசைகலைஞர்கள் மற்றும் அரசியல் கட்சியினரும் பங்கேற்பர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.