முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

254 உதவி பேராசிரியர்களின் நியமனங்கள் செல்லாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள 254 பேரின் நியமனங்களும் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013, 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் உரிய தகுதி பெற்றவர்கள் இல்லை எனக் கூறி, அறக்கட்டளையை நிர்வகித்த ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம், நோட்டீஸ் அனுப்பியிருந்தார். மேலும் தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, இந்த நியமனங்கள் தொடர்பாக சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்தக் கோரி, பிரேமலதா உட்பட ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கடந்த 2013, 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேரிரியர்களின் கல்வித்தகுதியை ஆராய வேண்டும் எனக் கூறி, இவர்களின் கல்விச் சான்றுகளை பெற்று சரிபார்க்க உத்தரவிட்டிருந்ததார்.

இதையடுத்து கல்லூரி கல்வி இயக்குனர், 254 உதவி பேராசிரியர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் ஆசிரியர் பணி அனுபவத்துக்கு வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்,
தேர்வு நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் நியமிக்கப்பட்ட 254 உதவி பேராசிரியர்களின் நியமனமும் செல்லாது என உத்தரவிட்டார். உதவி பேராசிரியர் தேர்வு தொடர்பாக அகில இந்திய அளவில் விண்ணப்பங்களை வரவேற்கவில்லை என்றும் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

2,014 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி!

Arivazhagan Chinnasamy

அதிமுக கொண்டுவந்த திட்டங்களை திமுக முடக்குகிறது-இபிஎஸ் குற்றச்சாட்டு

Web Editor

ஒரே நாளில் 11, 416 மெட்ரிக் டன் காய்கறிகள் விநியோகம்!

Halley Karthik